Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை அணியை ஏழு விக்கெட்டுகளால் வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி

In கிாிக்கட்
Updated: 06:34 GMT, May 9, 2017 | Published: 04:39 GMT, May 9, 2017 |
0 Comments
1215
This post was written by : Risha

10ஆவது ஐ.பி.எல். தொடரின் 48ஆவது போட்டியில் தரவரிசையில் முதலிடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஏழு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே ‘பிளே-ஓஃப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஹைதராபாத் டெக்கான் மைதானத்தில் இடம்பெற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 67 ஓட்டங்களையும், பார்திவ் படேல் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அணி சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், மோயஸ் ஹென்றிக்ஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg