Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையாவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

In இந்தியா
Updated: 07:08 GMT, May 9, 2017 | Published: 06:57 GMT, May 9, 2017 |
0 Comments
1385
This post was written by : Shailu

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகள் உட்பட பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற மல்லையா, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று நிலையில், அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் தங்கியுள்ள அவர் கடந்த மாதம் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg