Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கால்பந்து அரங்கில் மீண்டும் கால்பதிக்கும் மரடோனா

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:14 GMT, May 9, 2017 | Published: 07:14 GMT, May 9, 2017 |
0 Comments
1545
This post was written by : Elakkiya

கால்பந்து அரங்கில் ஐந்துவருட ஓய்வின் பின்னர் ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டியாகோ மரடோனா ஐக்கிய அரபு இராஜ்ஜிய கழக அணி ஒன்றின் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

அல் ஃபுஜைரா எவ்.சி அணியின் பயிச்சியாளராக இணைந்துள்ளதாக தனது பேஸ்புக்கில் மரடோனா கருத்து பதிவிட்டுள்ளார். ‘மரடோனா 10’ என்று பெயர் பொறிக்கப்பட்ட அல் ஃபுஜைரா எவ்.சி அணியின் ரி-சேட்டுடன் மரடோனா நிற்பது போன்ற ஒளிப்படம் ஒன்றை குறித்த கழக அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கால்பந்து உலகில் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்த மரடோனா கடந்த 1986 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஆர்ஜென்டீன அணியை தலைமைதாங்கி அணிக்கு சம்பியன் கிண்ணத்தையும் வென்று கொடுத்திருந்தார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு இவருடைய தலைமையில் விளையாடிய ஆர்ஜென்டீன அணி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீன அணியின் பயிற்சியாளராக இணைந்து கொண்டார்.

அதன்பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மற்றுமொரு கழக அணியான அல் வாஸ்ல் அணியின் பயிற்சியாளராக இணைந்துகொண்ட மரடோனா ஒருவருடம் கழித்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி சர்வதேச கால்பந்து சபையின் தலைவர் கியானி இன்ஃபான்ரினோவினால் சர்வதேச கால்பந்து சபை தூதுவராக கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg