Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

In இந்தியா
Updated: 08:17 GMT, May 9, 2017 | Published: 08:04 GMT, May 9, 2017 |
0 Comments
1345
This post was written by : Shailu

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கர்ணன், மனநல பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காததோடு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனை கடந்த ஆண்டு,கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து முறைப்பாட்டு கடிதம் ஒன்றை பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததோடு, அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனக்கு இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும்,  தனக்கு முன்னால் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமன்றி, அவ்வாறு ஆஜராகாத நீதிபதிகள் 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து உத்தரவும் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg