Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

In இந்தியா
Updated: 17:26 GMT, May 9, 2017 | Published: 09:39 GMT, May 9, 2017 |
0 Comments
1260
This post was written by : Shailu

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ், தொழிலாளர்களின் கோரிக்கைகளில் சுயநலத்தினை விட பொது நலனே அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அறிக்கையொன்றின் மூலம் ராமதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “13ஆவது ஊதிய உயர்வு மற்றும் காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

உழைக்கும் ஊழியர்களுக்கு ஊதியத்தையும், உழைத்துக் களைத்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தையும் சரியான திகதியில் வழங்க முடியாத நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.

எனவே தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவையல்ல. அவை நியாயமான கோரிக்கைகளே. அதுமட்டுமின்றி, அவர்களின் கோரிக்கைகளில் மக்கள் நலனும் உள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் இலாப நோக்கமற்ற பொதுச்சேவை நிறுவனம் என்பதால், அதன் செலவுகளை சமாளிக்க அரசு மானியம் வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இவற்றை கருத்திற்கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg