Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாவிற்கு எதிராக வாசு போர்க்கொடி!

In இலங்கை
Updated: 08:38 GMT, May 9, 2017 | Published: 08:38 GMT, May 9, 2017 |
0 Comments
1226
This post was written by : Varshini

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவாரென தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு ஒன்றிணைந்த எதிரணியிலேயே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு தமது அணியில் தகுதியுடைய பலர் உள்ளதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவதில் தமக்கு உடன்பாடு இல்லையென்றும் வாசுதேவ நாணயக்கார கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே தமது அணியின் நோக்கமென குறிப்பிட்ட அவர், அதனை மையமாகக் கொண்டே தமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg