Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தினேன்: மொஹமட் ஷமி

In கிாிக்கட்
Updated: 11:19 GMT, May 9, 2017 | Published: 09:46 GMT, May 9, 2017 |
0 Comments
1271
This post was written by : Elakkiya

இரண்டு வருட இடைவெளியில் உடல்வலிமை மற்றும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாத மொஹமட் ஷமி, எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரே ஷமியின் இறுதி ஒருநாள் போட்டித் தொடராக அமைந்திருந்தது.

இந்நிலையில், சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் தெரிவு செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த ஷமி, “ஒருநாள் போட்டி அணியிலிருந்து எனக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் எனது பலவீனங்களை சரிசெய்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரில் என்னால் சிறப்பாக செயற்பட முடியும் என்று நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடும் மொஹமட் ஷமி, ஐ.பி.எல். போட்டிகள் சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg