Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதவாதத்தை தூண்டியதாக ஜகார்த்தா ஆளுநருக்கு சிறைத்தண்டனை!

In
Updated: 11:21 GMT, May 9, 2017 | Published: 10:03 GMT, May 9, 2017 |
0 Comments
1276
This post was written by : Risha

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டில் ஜகார்த்தா ஆளுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்டதாக சீன வம்சாவழி கிறிஸ்தவ ஆளுநர் பாசுக்கி ஜஹாஜா புர்னாமா மீது வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பானது ஆளுநரின் ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளனர்.

தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, ஆளுநருக்கு எதிரான இந்த தீர்ப்பானது இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg