Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முழுமையான வில்லனாக மாறுகிறார் பிரசன்னா

In சினிமா
Updated: 11:38 GMT, May 9, 2017 | Published: 10:43 GMT, May 9, 2017 |
0 Comments
1100
This post was written by : Kandeepan

திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் கதாபத்திரத்திற்காக பல மாதங்களாக உடற்பயிற்சி செய்து தனது உடம்பினை தயார் செய்து வருகிறார் பிரசன்னா.  அதேபோல் மிஷ்கினின் துப்பறிவாளன் திரைப்படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கிறார் பிரசன்னா.

இதுவரை எந்த படத்திலும் உடலை காண்பித்து நடிக்காத பிரசன்னா, இந்த படத்தில் பொலிவுட் வில்லன்களுக்கு இணையாக ஆடையை கிழித்துக் கொண்டு சண்டைக் காட்சிகளில் தோன்றி மிரட்டுகிறார்.

தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய  ‘பவர் பாண்டி’யில் ராஜ்கிரணின் மகனாக நடித்த பிரசன்னா, தற்போது திருட்டுப்பயலே-2, துப்பறிவாளன், நிபுணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அஞ்சாதே படத்திற்கு பிறகு திருட்டுப்பயலே-2 படத்திலே வில்லனாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தனது நடிப்பில் மட்டுமன்றி உடல் மொழியிலும் சிறப்பாக கலக்கியுள்ளார் பிரச்சன்னா.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg