Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 10:53 GMT, May 9, 2017 | Published: 10:53 GMT, May 9, 2017 |
0 Comments
1327
This post was written by : Ravivarman

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக, உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கழிவு முகாமைத்துவம் செய்வதில் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யப்பா, வஜிர அபேவர்தன, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சாகல ரத்நாயக்க, பைசர் முஸ்தபா, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும், இராணுவ தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg