Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணையவுள்ள முன்னாள் பிரதமர்!

In ஐரோப்பா
Updated: 12:00 GMT, May 9, 2017 | Published: 10:49 GMT, May 9, 2017 |
0 Comments
1335
This post was written by : Risha

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக சோசலிச கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மனுவெல் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

சோசலிச கட்சி மரணித்துவிட்டது எனத் தெரிவித்த அவர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மக்ரோங்கின் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மக்ரோங்கின் கட்சியின் வேட்பாளராக மனுவெல் வோல்ஸை இணைத்துக்கொள்வதற்கு அவரது கட்சியினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன், பதிவுசெய்வதற்கு 24 மணிநேரம் மாத்திரமே கால அவகாசம் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் 39 வயதான இமானுவேல் மக்ரோங் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg