Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகளவான குடியேற்றவாசிகள் பிரித்தானியாவுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்

In
Updated: 12:24 GMT, May 9, 2017 | Published: 11:30 GMT, May 9, 2017 |
0 Comments
1751
This post was written by : Sylviya

பிரித்தானியா அதிகளவான குடியேற்றவாசிகளை உள்வாங்க வேண்டும் என, ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசு, அதிகளவான குடியேற்றவாசிகளை பிரித்தானியாவுக்குள் உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த ஐ.நா.வின் பிரித்தானியாவுக்கான பிரதிநிதி, “பிரித்தானியாவுக்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகள் தொடர்பில் ஏற்கனவே தெரிவித்திருந்த எண்ணிக்கைக்கு மேலாக ஆண்டு தோறும் மேலதிகமான 10,000 குடியேற்றவாசிகள் பிரித்தானியாவுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் சிரியாவிலிருந்து சுமார் 20,000 பேர் பிரித்தானியாவுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பர் எனவும் சுமார் 3000 சிறுவர்களுக்கு பிரித்தானியாவில் இருப்பிடம் அளிக்கப்படும் எனவும் பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg