Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெசாக் தினத்தில் கறுப்புக் கொடி காட்டச் சொன்னவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: விஜேதாச

In இலங்கை
Updated: 12:13 GMT, May 9, 2017 | Published: 11:12 GMT, May 9, 2017 |
0 Comments
1643
This post was written by : Ravivarman

வெசாக் தினத்தன்று கறுப்புக் கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள் விடுத்தவர்கள் அனைவருமே மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெசாக் தின ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புத்த பெருமான் பிறந்த புனித தினத்தை கொண்டாடுவதற்கு நாடு முழுவதும் தயாராகியுள்ள நிலையில் தராதரமற்ற கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டுள்ளமை வேதனையளிக்கின்றது.

இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் தேசத்துரோகியாக இருப்பார்கள் அல்லது மனநோயாளியாகத்தான் இருப்பார்கள்.

சர்வதேச வெசாக் தினமானது இம்முறை எமது நாட்டில் கொண்டாடப்படுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளமையானது எமக்கு பெருமைதரும் விடயமாகும்” என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg