Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசிகர்களிடம் விராட் கோஹ்லி மன்னிப்புக் கோரியுள்ளார்

In கிாிக்கட்
Updated: 12:39 GMT, May 9, 2017 | Published: 12:10 GMT, May 9, 2017 |
0 Comments
1490
This post was written by : Elakkiya

நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியமைக்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி இரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த ஆண்டு தொடரில் பிளே-ஓவ் சுற்றுக்குள் நுழைய முடியாது வெளியேறியது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள விராட் கோஹ்லி, ”எந்தவொரு நிபந்தனையும் இல்லாத அன்பையும், ஆதரவையும் அளித்த இரசிகர்களுக்கு நன்றி. நம்முடைய தரத்திற்கு ஏற்ற வகையில் தரமான கிரிக்கட்டை நாங்கள் விளையாடவில்லை என்பதற்காக மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி போன்று பெங்களூர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

”ஐ.பி.எல். 2017 ஏமாற்றம். சில கடினமான பாடங்களை கற்றுக்கொண்டு அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். சம்பியன்ஸ் தொடருக்கு முன்னதாக எனது அணி வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg