Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் வருகை, மலையக மக்களுக்கு அரசியல் அந்தஸ்தை கொடுக்க வேண்டும்

In இலங்கை
Updated: 13:28 GMT, May 9, 2017 | Published: 13:28 GMT, May 9, 2017 |
0 Comments
1552
This post was written by : Varshini

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையானது மலையக மக்களுக்கு அரசியல் அந்தஸ்தைக் கொடுக்கும் எனக் கருதுவதாக மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மலையக மக்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமார் 200 வருட வரலாற்றைக் கொண்டுள்ள மக்கள் தங்கள் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் தொழில் உரிமையை இழந்துகொண்டிருக்கின்றதோடு, அரசியல் பொருளாதார அநாதைகளாக, சமூக கௌரவமற்ற மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை மலையக அரசியலுக்கான அங்கீகாரம் என கருதுவதோடு, தேசிய இனம் என்ற அங்கீகாரத்தை கொடுக்கும் பாதையையும் திறந்துவைக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg