Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: நாமல்

In இலங்கை
Published: 17:24 GMT, May 9, 2017 |
0 Comments
1259
This post was written by : Ravivarman
nam

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை, வெகுவிரைவில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசுக்கு அக்கறையில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது. மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி செய்யப் பார்க்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சி அமையும் நாள் வரும். விரைவில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அமையும். அதனை அவர்களால் தடுக்க முடியாது” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg