Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய பதற்றங்களை தீர்ப்பதாக தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி உறுதி

In
Updated: 06:21 GMT, May 10, 2017 | Published: 06:21 GMT, May 10, 2017 |
0 Comments
1708
This post was written by : Elakkiya

வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்களை குறைக்கக்கூடிய வகையிலான பணிகளை செய்வதாக, தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மூன் ஜே இன் உறுதியளித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) தென் கொரிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட மூன் ஜே இன் அதன்பின்னர் தனது முதலாவது உரையில் மேற்படி உறுதி எடுத்துக்கொண்டார்.

இதன்போது கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை தீர்ப்பதற்கும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்திய ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை, ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜே இன்னும், கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக ஹொங் யூன்-பையோனும் மிதவாதியான அஹ்ன் சியொல்- சோ ஆகியோரும் போட்டியிட்டனர்.

இறுதி முடிவுகளின் பிரகாரம் 41.1 சதவீத வாக்குகளை பெற்று மூன் ஜே இன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஹொங் யூன்-பையோ (Hong Joon-pyo ) 25.5 சதவீத வாக்குகளையும் அஹ்ன் சியொல்- சோ ( Ahn Cheol-soo) 21.4 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களிலேயே மூன் ஜே இன் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg