Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒபாமா கைவிட்ட திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கிறார் ட்ரம்ப்!

In உலகம்
Updated: 05:22 GMT, May 10, 2017 | Published: 04:46 GMT, May 10, 2017 |
0 Comments
1281
This post was written by : Anojkiyan

ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முகாமிட்டிருந்த அமெரிக்க துருப்புகளை மீள பெற்றுக்கொண்ட கடந்த பராக் ஓபாமா அரசின் தீர்மானத்தை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளார்.

இதன்படி, ஆப்கானில் அராஜகம் செய்யும் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க துருப்புக்களை அங்கு நிலைநிறுத்த ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக, ஆப்கான் – பாகிஸ்தான் திட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் உள்ள பகுதிகளில் வெற்றிகரமான யுக்திகளை கையாள ட்ரம்ப் விரும்புவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள், பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆப்கானில் முகாமிட்டிருந்தனர்.

அதன்பின் கடந்த பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனை தனது தேர்தல் பரப்புரை காலத்தின் போது கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், மீண்டும் ஆப்கானில் அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்த தீர்மானித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg