Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தற்காலிக தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Published: 04:26 GMT, May 10, 2017 |
0 Comments
1244
This post was written by : Shailu
kulbhushan jadav

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டை குல்புஷன் ஒப்புக் கொண்டது போன்ற காணொளியை பாகிஸ்தான் அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபிற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து இருப்பது குறித்து அவரின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கும் என்றும் அவருக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்றும் தெரிவித்த சுஷ்மா, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளதோடு குறித்த விடயம் பாகிஸ்தானால் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், அவருக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg