Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

In இந்தியா
Updated: 06:06 GMT, May 10, 2017 | Published: 05:43 GMT, May 10, 2017 |
0 Comments
1311
This post was written by : Shailu

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு வருகை சந்த பரூக் அப்துல்லா, காஷ்மீர் பகுதியில் நிலவுகிற அமைதியற்ற சூழல் குறித்து, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த ரூக் அப்துல்லா, “காஷ்மீர் பிரச்சினை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல. இதற்கு அரசியல் தீர்வு காண விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அத்தோடு புதிய மாற்றங்களின் மூலமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் காஷ்மீரின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg