Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய பிரதமரை விமான நிலையத்தில் சந்திக்கவுள்ள கூட்டமைப்பினர்

In இலங்கை
Updated: 11:57 GMT, May 10, 2017 | Published: 05:35 GMT, May 10, 2017 |
0 Comments
1483
This post was written by : Risha

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பின் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள மோடி, வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் மாலை 3 மணிக்கு கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg