Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்

In உலகம்
Updated: 09:39 GMT, May 10, 2017 | Published: 07:46 GMT, May 10, 2017 |
0 Comments
1302
This post was written by : Elakkiya

வெனிசுவேலாவின் மேற்கு மாநிலமான தச்சிராவில் (Tachira) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது.

வெனிசுவோலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோவை பதவிவிலகக் கோரி, மாநில தலைநகர் கிறிஸ்டோபலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது முகங்களை மூடியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் ஆறு வாரகாலமாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.

சோசலிஸ்ட் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸினால் தேர்வு செய்யப்பட்ட நிக்கோலா மடுரோ, சாவேஸ் இறந்த பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயகத் தேர்தலில் 1 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

அதன்பின்னர் மடுரோவின் தவறான நிர்வாகம், எண்ணெய் விலை வீழ்ச்சி, மருந்துகளின் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்துடன் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்தது.

இந்நிலையில், மாநில தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு மாறாக அரசியலமைப்பை சீர்திருத்துவதற்கான அதிகாரத்துடன் அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கு மடுரோ அழைப்பு விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg