Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடையற்ற வர்த்தகத்தை தொழிற்கட்சி பாதுகாக்கும்: ஜெரமி கோர்பின்

In
Updated: 08:28 GMT, May 10, 2017 | Published: 08:28 GMT, May 10, 2017 |
0 Comments
1257
This post was written by : Elakkiya

பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றால் தடையற்ற வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய நேர்காணலின் போதே ஜெரமி கோர்பின் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் அல்லது எத்தகைய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கருத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவை வழிநடத்துவீர்களா என்ற கேள்விக்கு ஜெரமி கோர்பின் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் என்றே கட்சியின் பெரும்பாலானோர் விரும்பினர். எனினும் சிலர் வெளியேறவேண்டும் என்று வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு தொழிற்கட்சி போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg