Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதியோர்களுக்காக ‘பாகுபலி – 2’ சிறப்பு காட்சி!

In சினிமா
Updated: 10:10 GMT, May 10, 2017 | Published: 09:09 GMT, May 10, 2017 |
0 Comments
1474
This post was written by : Kandeepan

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில்  அண்மையில் வெளியாகிய ‘பாகுபலி- 2’ படத்தினை, அன்னையர் தினத்தன்று சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு காட்சி ஒன்றினை காண்பிப்பதற்கு இளைஞர் சமூக அமைப்பொன்று ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் இவ் ஏற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் இல்லத்தில் உள்ள 101 முதியவர்களின் விருப்பத்திற்கு இணங்க, எதிர்வரும் அன்னையர் தினத்தை (மே – 14) முன்னிட்டு 13ஆம் திகதியன்று சென்னையில் அமைந்துள்ள ராக்கி திரையரங்கில் ‘பாகுபலி-2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கின்றது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் ‘பாகுபலி-2’,  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம்  ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘பாகுபலி – 2′, திரையிடப்பட்டு 2 வாரங்களை நெருங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூ.1227 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2’-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டியிருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg