Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.நகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளுக்கான அறிவுறுத்தல் பதாதைகள்

In இலங்கை
Updated: 09:55 GMT, May 10, 2017 | Published: 09:31 GMT, May 10, 2017 |
0 Comments
1209
This post was written by : Vithushagan

யாழ். நகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளிற்கான அறிவுறுத்தல் பதாதைகள் பொலிஸாரினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். நகர் முதலாம் குறுக்குச் சந்திக்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, குறித்த காட்சிப் பதாதைகளை பார்வையிட்டு ஆரம்பித்துவைத்தார்.

குறித்த பதாதையில் பிரதான வீதிக்கு உட்செலுத்துவதற்கு முன்னர் நிறுத்தவும், சமிக்ஞை விளக்கை அவதானிக்கவும், பச்சை விளக்கு ஒளிரும் போது வீதியின் இரு பக்கங்களையும் நன்கு அவதானித்து பிரதான வீதிக்குச் செல்லவும்.

எப்போதும் வீதியின் இடது பக்கமாக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளினைச் செலுத்தவும் போன்ற அறிவுறுத்தல்களை பொலிஸார் காட்சிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பதாதைகள் யாழ். நகரப்பகுதிகளின் பிரதான வீதிகள் மற்றும் ஏனைய நகரப்பகுதிகளிலும் பொலிஸாரினால் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத் திட்டம் குறித்து யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன கருத்து தெரிவிக்கையில், “விபத்துக்கள் அதிகரிப்பதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் தெரிந்துகொள்வதற்காகவும், வீதிகளில் அவதானமாக செல்வதற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், இவ்வாறான அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இன்றைய தினம் இந்த பதாதைகளை காட்சிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg