Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பில் எட்டு சிறைக் கைதிகள் விடுதலை

In இலங்கை
Published: 11:20 GMT, May 10, 2017 |
0 Comments
1150
This post was written by : Risha
bati

வெசாக்  பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பரின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த எட்டு பேரும் இன்று (புதன்கிழமை) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுகுற்றம் புரிந்த தண்டப்பணம் nலுத்த வசதியற்ற ஆண் கைதிகள் எட்டுப்பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக், புதுவருடம் போன்ற விசேட நாட்களில் இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. அந்தவகையில், இன்று நாடளாவிய ரீதியில் 550 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg