Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பு பெற்ற ‘ஒருகிடாயின் கருணை மனு’

In சினிமா
Updated: 11:50 GMT, May 10, 2017 | Published: 11:49 GMT, May 10, 2017 |
0 Comments
1231
This post was written by : Shailu

‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஒருகிடாயின் கருணை மனு’.

விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஜோர்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்துக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg