Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில் வீழ்ந்தது குஜராத் அணி : டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி

In கிாிக்கட்
Updated: 04:42 GMT, May 11, 2017 | Published: 04:31 GMT, May 11, 2017 |
0 Comments
1180
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரின் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (புதன்கிழமை) கன்பூரில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பின்ச் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனைதொடர்ந்து, 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணி, ஷிரியாஸ் ஐயரின் அதிரடியின் மூலம் 19.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது 57 பந்துகளில் 2 சிக்ஸர் 15 பவுண்ரிகள் அடங்களாக 96 ஓட்டங்கள் பெற்றுக்கொண்ட ஷிரியாஸ் ஐயர் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இவ் இரு அணிகளும் தவறவிட்டிருந்தாலும் டெல்லி அணிக்கு இவ் வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg