Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 07:23 GMT, May 11, 2017 | Published: 06:26 GMT, May 11, 2017 |
0 Comments
1194
This post was written by : Shailu

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கை வெளியிட்ட ஜி.ராமகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார்கள்.

போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்ற நிலையில், காப்புருதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகள் வாங்கிய கடனுக்காக திருப்பிச் செலுத்திய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தியுள்ளன.

மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 7000 கோடிக்கு மேல் வழங்காததால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பணப்பயன்களை வழங்கவில்லை.

எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.

தங்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியின் காரணமாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கும் நிலையில் இதர மக்கள் பிரச்சினைகளைப் போலவே போக்குவரத்துக் கழகங்களைப் பற்றியும், தொழிலாளர்களை பற்றியும் சற்றும் கவலைப்படாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு போக்குவரத்துக் கழகங்களுக்கு தான் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையும் உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும், இப்போராட்டத்தை தவிர்க்கும் வகையில் உரிய நிதியை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg