Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதுமையடையும் பெற்றோரை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 33 பில்லியன் டொலர்கள் செலவு

In கனடா
Updated: 12:12 GMT, May 11, 2017 | Published: 12:12 GMT, May 11, 2017 |
0 Comments
1180
This post was written by : Anojkiyan

கனடாவில் முதுமையடையும் பெற்றோரை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 33 பில்லியன் டொலர்கள் நேரடியாக செலவாவதாக கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

65 வயது அல்லது அதற்கு அதிகமான வயதை உடைய முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 17 சதவீதமாக உள்ள நிலையில், அது அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 22 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அப்போது செலவீனமும் பலமடங்கு அதிகரிக்கும் எனவும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கனேடியர்கள் அல்லது 14சதவீதக் கனேடியர்கள் 65இற்கும் மேற்பட்ட வயதான தமது பெற்றோரை பராமரிப்பதற்காக தமது பணத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 3,300 டொலர்களைச் செலவழிப்பதாகவும், இது நாடு தழுவிய அளவில் 6 பில்லியன் டொலர்களாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வேலைக்குச் செல்லும் கனேடியர்களுள் தங்களின் பெற்றோர்களை பராமரிக்கும் 30சதவீதமான கனேடியர்கள் தமது உழைப்பு நேரம், விடுமுறைக்காலம் உள்ளிட்டவற்றையும் சேர்த்து நோக்கும்போது, மேலும் 27 பில்லியன்களை ஆண்டுதோறும் செலவிடுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg