Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் சகல பாடசாலை அதிபர்களும் ஒன்று கூடுவதற்கு தீர்மானம்

In இலங்கை
Updated: 17:33 GMT, May 11, 2017 | Published: 17:33 GMT, May 11, 2017 |
0 Comments
1207
This post was written by : Vithushagan

அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலை அதிபர்களும் கொழும்பில் ஒன்று கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு அதிபர்களாக நியமனம் பெற்ற 4200 அதிபர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்ப்படவில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி அதிகாரிகளால் 3000 இந்கு அதிகமானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படாது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அதிபர்கள் கொழும்பில் ஒன்றுக் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg