Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை: மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
Updated: 06:54 GMT, May 12, 2017 | Published: 03:02 GMT, May 12, 2017 |
0 Comments
1254
This post was written by : Ravivarman

நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் தமக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் மீதான அதிருப்தி மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. அரசியல் ஸ்திரமற்றநிலை காணப்படுகின்றது. இன்று மக்கள் ஓர் நிலையான ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர். நாட்டில் எதற்கு எடுத்தாலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

நாட்டினது பொருளாதார நடவடிக்கைகளை இவை மேலும் பாதிப்படையச் செய்யும். இந்த நிலையில் நாம் புரட்சியை ஏற்படுத்தித்தான் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதில்லை” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg