Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுப்ரமணியத்தின் தற்கொலை வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

In இந்தியா
Updated: 03:56 GMT, May 12, 2017 | Published: 03:53 GMT, May 12, 2017 |
0 Comments
1419
This post was written by : Surenth

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியத்தின் தற்கொலை வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என தமிழக பொலிஸ் ஆணையாளர் டி.கே.இராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, சுப்ரமணியன் தனது வீட்டுத் தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், அவரது தற்கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி சுப்ரமணியன் எழுதி வைத்ததாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குறித்த வழக்கு தொடர்பில், விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg