Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரமாண்ட டிஜிட்டல் வெசாக் பந்தலை திறந்துவைத்தார் மோடி (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 03:56 GMT, May 12, 2017 | Published: 03:56 GMT, May 12, 2017 |
0 Comments
1513
This post was written by : Varshini

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமாண்ட டிஜிட்டல் வெசாக் பந்தலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார்.

ஐ.நா.வின் சர்வதேச வெசாக் பண்டிகை இம்முறை இலங்கையில் நடைபெறும் நிலையில், அதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள பாரத பிரதமர், பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க குறித்த பந்தலை திறந்துவைத்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

BMICH (1) BMICH (2) BMICH (3) BMICH (4) BMICH (5)

bmich (8) bmich (7)

BMICH (1) BMICH (2) BMICH (3)

சர்வதேச வெசாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார் பிரதமர் மோடி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச வெசாக் தின நிகழ்வை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதற்கான ஆயத்தங்கள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் வருகைதந்த வண்ணமுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தி ஆசிரியா்  தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்த பின்னர், டிக்கோயாவில் இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள கிளங்கன் வைத்தியசாலையை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

அதன் பின்னர் நோர்வூட் மைதானத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள மக்கள் கூட்டத்தில் விசேட உரையை மோடி நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குச் செல்லும் மோடி, அங்கு நடைபெறும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரியால் மோடிக்கு மதியபோஷனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg