Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நக்குல் முறையில் பந்து வீசுவதற்கு மொஹித் சர்மா தகுதியானவர்: கம்பீர்

In கிாிக்கட்
Updated: 06:57 GMT, May 12, 2017 | Published: 06:57 GMT, May 12, 2017 |
0 Comments
1252
This post was written by : Anojkiyan

நக்குல் முறையில் பந்துவீசுவதற்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தகுதியானவர் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பந்து வீச்சாளர்களால் துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காட வைக்கும் நக்குல் முறை பந்து வீச்சானது, வேகமாக ஓடிவந்து பந்தை மெதுவாக வீசும் ஒரு தந்திரமான முறையாகும்.

இந்த முறைமையினை கடந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், மொஹித் சர்மா சிறந்த முறையில் செயற்படுத்தினார். இப்போட்டியில் 3 ஓவரில் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மொஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்நிலையில், குறித்த நுனுக்கமாக பந்து முறைமை குறித்து கௌதம் கம்பீர் கூறுகையில்,  ”நக்குல் பந்துவீச்சு முறையானது கிரிக்கெட்டிற்கு அடிப்பந்தாட்டம் (டீயளநடியடட) விளையாட்டில் இருந்து வந்ததாகும். இந்த வகை பந்துகளை எதிர்கொள்ள துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக உள்ளது. அடிப்பந்தாட்டம் விளையாட்டில் நிலையான ஒருவகை பந்துகளை வீசுவதற்குப் பதிலாக மாறுபாடாக ‘நக்குல்’ பந்து வீசுகிறார்கள். வேகமான ஓடிவந்து இதுபோன்று மாறுபட்ட முறையில் கிரிக்கெட் போட்டியில் பந்து வீசுவதற்கு மொஹித் சர்மா தகுதியானவர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg