Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரளாவில் இளைஞர்கள் பலவந்தமாக ஐ.எஸ் தீவிரவாதக் குழுவில் இணைப்பு!

In இந்தியா
Updated: 06:47 GMT, May 12, 2017 | Published: 06:47 GMT, May 12, 2017 |
0 Comments
1227
This post was written by : Ravivarman

கேரளாவில் 200க்கு அதிகமான இளைஞர்கள் ஐ.எஸ். வட்ஸ் அப் குழுவில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் இணைய அக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்த ராஷித் அப்துல்லா என்ற இளைஞரால் உருவாக்கப்பட்ட வட்ஸ் அப் குழுவில் கேரளாவைச் சேர்ந்த 211 இளைஞர்கள் இணைப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் ஹரிஸ் மஸ்தான் என்ற கேரள இளைஞர் அவரது விருப்பமின்றி, பழிவாங்கும் நோக்கத்துடன் ஐ.எஸ்.ஸின் வட்ஸ் அப் குழுவில் தான் இணைப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் அறியக்கிடைத்ததாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg