Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாரத்திற்கு 4 லட்சம் பவுண்ஸ்கள் சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:46 GMT, May 12, 2017 | Published: 07:46 GMT, May 12, 2017 |
0 Comments
1212
This post was written by : Anojkiyan

கால்பந்து உலகின் நட்சத்திர வீரராக திகழும் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வரிப்பணம் போக வாரத்திற்கு 4 லட்சம் பவுண்ஸ்கள் சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக திகழும் இவர், அனுசரணை தொடர்பாக நான்கரை மணி நேரம் செலவழிப்பதற்கு சுமார் 920000 பவுண்ஸ்கள் வாடகையாக வாங்கியுள்ளதாகவும் கால்பந்து லீக்ஸ் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இமேஜ் ரைட்ஸ் நிறுவனமான மல்டிஸ்போர்ட்ஸ் அண்ட் இமேஜ் மானேஜ்மென்ட் நிறுவனத்தை கடந்த 2013ஆம் ஆண்டு அணுகியது.

அப்போது ரொனால்டோவுடன் விளம்பரபடம் எடுக்க, சமூக இணைய தளத்தின் சில தகவல் பெற, ஐந்து ரி-சர்டில் கையெழுத்திட மற்றும் சொந்த நாட்டில் ரொனால்டோவின் படத்தை விளம்பரங்களில் ஒரு நாள் பயன்படுத்திக் கொள்ள என ரொனால்டோவை பயன்படுத்திக் கொள்ள 92 லட்சம் பவுண்ஸ்கள் கொடுக்க அந்த நிறுவனம் சம்மதித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg