Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ வீரர் உமர் பயஸை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளே கொன்றனர்: விசாரணைகளில் உறுதி

In இந்தியா
Updated: 07:44 GMT, May 12, 2017 | Published: 07:41 GMT, May 12, 2017 |
0 Comments
1371
This post was written by : Ravivarman
1.7

இராணுவ வீரர் உமர் பயஸை, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளே கொலை செய்துள்ளனர் என காஷ்மீரின் பொலிஸ் அதிகாரியான ஐ.ஜி. கிலானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய உமர் பயஸ். ஜம்முவின் அக்னூர் பகுதியில், ராஜ்புதனா ரைபிள்ஸ் படை பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் இவரை அண்மையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஷோபியான் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள், இராணுவத்தினரின் ஆயுதங்களைப் பறித்துச் சென்ற சம்பவத்தின் பின்னரே,  உமர் பயஸை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்” என ஐ.ஜி. கிலானி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg