Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தடியடி நடத்துவதா?: ராமதாஸ்

In இந்தியா
Updated: 08:32 GMT, May 12, 2017 | Published: 08:32 GMT, May 12, 2017 |
0 Comments
1249
This post was written by : Ravivarman

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தடியடி நடத்துவது கண்டிக்கப்படவேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், மதுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறைகொண்ட உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கதாகும். இதனையும் மீறி போராட்டம் நடத்துகின்ற பெண்களின் மீது தடியடி நடத்துவது கேவலமான செயலாகும்” என ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg