Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறுகிறரா டு பிளிசிஸ்?

In கிாிக்கட்
Updated: 12:11 GMT, May 12, 2017 | Published: 12:11 GMT, May 12, 2017 |
0 Comments
2290
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க டெஸ்ட் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கெட் அணியின் தலைவரான டு பிளிசிஸ், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கிண்ண தொடருடன் ஓய்வுபெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

32 வயதான டு பிளிசிஸ், அணிக்காக பல வெற்றிகளை தேடிதந்திருந்தாலும் உலக்கிண்ணத்தை வெல்லவில்லை என்ற ஏக்கத்தை அடிக்கடி வெளிப்படுத்திவருகின்றார். ஆகையால் கடுமையாக போராடியாவது அணிக்காக உலக்கிண்ணத்தை பரிசளித்துவிட்டு விடைபெறலாம் என்ற எண்ணத்துடன் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ”நான் உள்பட மூத்த வீரர்கள் 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தொடருடன் விடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் நான் விளையாடுவேன். அதன்பின் எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அறிவிப்பேன்” என கூறினார்.

கடந்த உலகக்கிண்ண தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய தென்னாபிரிக்கா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து கண்ணீருடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg