Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான காளான் மஞ்சூரியன்

In
Updated: 12:22 GMT, May 12, 2017 | Published: 12:22 GMT, May 12, 2017 |
0 Comments
1544
This post was written by : Surenth

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் – 250 கிராம்
இஞ்சி பூண்டு – 1 டீஸ்பூன்
சோள மா – 4 – 5 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சோஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

மாற்றும்
இஞ்சி பூண்டு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
சோயா சோஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சோஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

* சோள மா, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சோஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோயா சோஸ், தக்காளி கெட்சப், சில்லி சோஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான காளான மஞ்சூரியன் தயார்….

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg