Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருத்து வீட்டு திட்டத்தை எதிர்ப்போம்: சி.வி.

In இலங்கை
Published: 12:11 GMT, May 12, 2017 |
0 Comments
1303
This post was written by : Risha

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்தை வட. மாகாண அமைச்சர்களுடன் இணைந்து எதிர்ப்போம் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, 65 ஆயிரம் பொருத்து வீட்டு திட்டத்தின் முதற்கட்டமாக வட. மாகாணத்தில் 6 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மேற்படி விடயம் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் என்னுடன் கலந்துரையாடினார். அதன்போது, எமது மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் குறித்து எம்முடன் கலந்துரையாடாது தீர்மானங்களை மேற்கொள்வது வடக்கு மக்களை புறக்கணிக்கும் செயலாகும் என சுட்டிக்காட்டினேன்.

மேலும், வடக்கில் முன்னெடுக்க கூடிய வீடமைப்பு முறை குறித்து நாம் சில திட்டங்களை வகுத்துள்ளோம். எனவே அவை குறித்தும் பரிசீலித்து தீர்மானிப்போம் என்றும் இவ்வாறு தான்தோன்றித்தனமாக தீர்மானமெடுத்தல் சிறப்பாக அமையாது என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனால் அமைச்சரவையின் கட்டளையையே தான் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார். எனவே, இது குறித்து வட. மாகாண அமைச்சர்களுடன் கலந்துரையாடி நாம் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என குறிப்பிட்டேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg