Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சமஷ்டி’ அரசியல் தீர்விற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மோடியிடம் கூட்டமைப்பு கோரிக்கை

In இலங்கை
Updated: 14:29 GMT, May 12, 2017 | Published: 14:29 GMT, May 12, 2017 |
0 Comments
1952
This post was written by : Varshini

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக விபரமாக எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

குறுகிய சந்திப்பாக நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் மோடி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும், இவை தொடர்பில் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணிலிடம் எடுத்துரைத்ததாகவும் தற்போது ஜனாதிபதியிடமும் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று, பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg