Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்காமை குறித்து சீனா மௌனம்

In இலங்கை
Updated: 03:52 GMT, May 13, 2017 | Published: 17:36 GMT, May 12, 2017 |
0 Comments
1216
This post was written by : Vithushagan

தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து சீனா மௌனம் காத்து வருகின்றது.

இந்தநிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தமது நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில்நங்கூரமிட சீனா விடுத்த வேண்டுகோளை, இலங்கை நிராகரித்தது.

இது தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த சீன வெளியுறவு பேச்சாளர் கெங்சுனாங், சீனாவின் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி விட்டு பதில் வழங்குவதாககுறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியாதெரிவிக்கின்ற நிலையில், வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காகவே தமது நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்து  சமுத்திர பகுதிக்கு செல்கின்றன என்று சீனா குறிப்பிட்டு வருகிறது.

எவ்வாறெனினும்,  2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் நங்கூரமிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg