Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றியமைக்க இராஜதந்திரிகளை நாடும் கூட்டமைப்பு

In இலங்கை
Updated: 04:28 GMT, May 13, 2017 | Published: 04:28 GMT, May 13, 2017 |
0 Comments
1374
This post was written by : Risha

அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு, சர்வதேச இராஜதந்திரிகள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டிருந்த குறித்த சட்ட வரைபை கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்திருந்த நிலையிலேயே தற்போமு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதச் சட்டவரைபு கடந்த வருடம் வெளியாகியபோது அதில் 4 திருத்தங்களைக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. அவற்றில் ஒரு திருத்தம் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய திருத்தங்கள் புறந்தள்ளப்பட்டன.

இதேவேளை, நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட இது மிக மோசமானது எனவும் கூட்டமைப்பு சாடியுள்ளது.

இந்நிலையில், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இராஜதந்திரிகள் ஊடாக அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg