Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடியாது: தம்பிதுரை

In இந்தியா
Updated: 04:38 GMT, May 13, 2017 | Published: 04:38 GMT, May 13, 2017 |
0 Comments
1263
This post was written by : Surenth

கட்சியில் இருந்து சசிகலாவை தனிப்பட்ட ஒருவரால் நீக்க முடியாது எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவரை பொதுக்குழுவே தீர்மானித்தது எனவும் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்தது பொதுக்குழு என்றும் அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவை தம்பிதுரை, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர்கள் எப்படி மாற்ற முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், எந்த பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது என அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து விவாதிப்பதற்கு தாங்கள் தரப்பு தயாராக இருப்பதாகவும் சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழி நடத்திச் செல்வதாகவும் தம்பிதுரை குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg