Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட மத்திய மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் கூட்டு எதிர்க்கட்சி

In இலங்கை
Updated: 06:24 GMT, May 13, 2017 | Published: 05:46 GMT, May 13, 2017 |
0 Comments
1204
This post was written by : Anojkiyan

வட மத்திய மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தம் பக்கம் சாய்த்துக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான 18 வடமத்திய மாகாணசபை உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதன் பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மாகாணசபையில் அங்கம் வகிக்கும் 18 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் இந்த 18 உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg