Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுப்ரமணியம் தற்கொலை வழக்கு: விசாரணை அதிகாரியாக சத்யமூர்த்தி நியமனம்

In இந்தியா
Updated: 06:31 GMT, May 13, 2017 | Published: 06:31 GMT, May 13, 2017 |
0 Comments
1372
This post was written by : Surenth

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் தற்கொலை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக பொலிஸ் துணைக் கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தற்கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி, பொலிஸ் ஆணையாளர் இராஜேந்திரன் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதுடன், சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சென்னையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் இருமுறை சுப்ரமணியம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த 8ஆம் திகதி மோகனூரில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மோகனூர் பொலிஸ் நிலைய ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிந்து விசாரணையை முன்னெடுத்தார்.

பின்னர், வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்ட கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg