Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைசூர் அரண்மனையில் தீ விபத்து: 3 இலட்சம் ரூபாய் தீயில் எரிந்துள்ளது

In இந்தியா
Updated: 07:55 GMT, May 13, 2017 | Published: 07:55 GMT, May 13, 2017 |
0 Comments
1314
This post was written by : Surenth

மைசூர் அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 3 இலட்சம் ரூபாய் தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார சுழற்சிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மைசூர் அரண்மனையில் உள்ள நுழைவுச்சீட்டு விற்பனை செய்யும் பகுதியில் குறித்த தீ விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) சம்பவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மைசூர் அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன. இதில் வடக்கு பகுதியில் உள்ள வரஹா கதவு எனப்படும் கோட்டை வாசல் அருகே, நுழைவுச்சீட்டு விற்பனை செய்யும் அறை உள்ளது. அதற்கு அருகில் ஏ.டி.எம். இயந்திரம் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவலாளி பொலிஸாருக்கு தீயணைப்பு படையினருக்கும் அறிவித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஆறு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருந்த போதும், நுழைவுச்சீட்டு அறையில் இருந்த இயந்திரம், ஆவணங்கள், ஏ.டி.எம். இயந்திரம், குளிரூட்டி என்பன எரிந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg