Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று உள்ளதா? – மைத்ரேயன்

In இந்தியா
Updated: 08:50 GMT, May 13, 2017 | Published: 08:50 GMT, May 13, 2017 |
0 Comments
1330
This post was written by : Surenth

தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று உள்ளதா என்கிற நிலை தற்போது தோன்றியுள்ளதாகவும் தமிழகத்தில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை எனவும் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற இந்த நிலையில், இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கும் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து முறைப்பாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டதாகவும் தற்போது அனைவரும் தனது இஷ்டம் போல் செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அமைச்சர்களால் தொடரும் ஊழல் குறித்து முறைப்பாடுகள் தற்போதும் செய்யப்படுவதாகவும் மைத்ரேயன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg